கனடாவின் பிரம்டனில் கார் கொள்ளையில் ஈடுபட்டதாக சிறுமிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட நானுக்கு பேருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
வன்முறையான முறையில் கார் கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கார் உரிமையாளரை ஏமாற்றி தம்மை சந்திக்க வருமாறு அழைத்துச் சென்று வாகனத் தரிப்பிடத்தில் வைத்து தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவரின் வாகனம், அலைபேசி மற்றும் பணப்பை என்பனவற்றை நான்கு பேர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
எவ்வாறெனினும், கொள்ளையிடப்பட்ட வாகனத்தை பொலிஸார் மீட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
13 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமியரும் 16 மற்றும் 17 வயதான சிறுவர்களும் இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.