கனடாவில் கார்பன் வரி அதிகரிப்பின் எதிரொலியாக எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தி;ல் எரிபொருளுக்கான விலைகள் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய முதல் நாட்டில் கார்பன் வரி ஒரு தொன்னுக்கு 15 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 3.3 சதங்களினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 4 சதங்களினாலும் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 1.62 டொலர்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பில் கருததிற் கொண்டு அரசாங்கம் இவ்வாறு கார்பன் வரியை விதித்துள்ளது.
எவ்வாறெனினும், ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை குறைப்பு நடைமுறையை நீடிப்பதாக அறிவித்திருந்தது.
இந்த வரிச் சலுகை நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.