கனடாவின் எட்மோன்டனில் காணாமல் போன 13 வயதான சிறுமியொருவர் அமெரிக்காவில் மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஒரகன் மாநிலத்தின் போர்ட்லன்ட் நகரில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் 41 வயதான ஒரகன் பிரஜை ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த நபருக்கு எதிராக அமெரிக்க மற்றும் கனேடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன தமது பிள்ளை அமெரிக்காவில் உயிருடன் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தாங்கள் அமெரிக்கா நோக்கிப் பயணிப்பதாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
லய்லா சுமித் என்ற 13 வயதான சிறுமி கடந்த 24ம் திகதி காணாமல் போயிருந்தார்.
இந்த நபர் லய்லாவை எவ்வாறு முதன் முதலாக தொடர்பு கொண்டார் என்பதும், எவ்வாறு லய்லா அமெரிக்க எல்லையை கடந்தார் என்பதும் இன்னும் தெளிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.