Reading Time: < 1 minute

கனடாவில் காணாமல் போன பெண் ஒருவரை தேடும் பணிகளில் ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஹமில்டனில் ஷேர்லி லவ் என்ற 80 வயதான பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். கிங்ஸ்பொரஸ்ட் கொல்ப் கோர்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வயது முதிர்ந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை மவுன்ட் எல்பியன் வீதிக்கு அருகாமையில் இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளையின பெண்ணான ஷேர்லி கட்டையான தலை முடியைக் கொண்டு சராசரி உயரத்தைக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பெண் பற்றிய 905-546-4925 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.