கனடாவில் காணாமல் போன இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 18 வயதான ஜோசப் மாகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் இந்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.
இந்த இளைஞரை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது ஜோசப் மாகு பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவர் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி காணாமல் போயிருந்தார்.
எனினும் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இளைஞர் எவ்வாறு உயிரிழந்தார்? மரணத்திற்கான காரணம் என்ன என்பதை குறித்து தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
Comments are closed, but trackbacks and pingbacks are open.