Reading Time: < 1 minute

ஹாமில்டன் மற்றும் தெற்கு ஒன்டாரியோவில் செயல்பட்ட வாகனத் திருட்டு கும்பலிடமிருந்து 15 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஹாமில்டன் போலீசார் (HPS) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அழகிய மற்றும் உயர்தர வாகனங்களை குறிவைத்து திருடிய இந்த கும்பல், அவற்றை தேசிய மற்றும் சர்வதேச அளவில் விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் 7 பேரை கைது செய்துள்ளனர் என்பதுடன் மேலும் 19 வயதான ஹாசன் சுலைமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருடப்பட்ட வாகனங்கள் இரவு நேரங்களில் கொள்கலன்களில் (shipping containers) ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன.

பெரும்பாலான வாகனங்கள் முதலில் மொண்ட்ரியால் (Montreal) நகருக்கு அனுப்பப்பட்டு, பின்னர் கானா (Ghana), ஈராக் (Iraq), மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கனடாவில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண் மாற்றப்பட்டு உள்நாட்டு சந்தையில் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.