Reading Time: < 1 minute

கனடாவில் புற்றுநோய் ஆய்வுகளுக்காக நிதி திரட்டும் நோக்கில் பயணங்களை மேற்கொண்ட சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் இந்த சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.

டொரன்டோவின் இட்டோபிகாக் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து இந்த சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சைக்கிள் மற்றும் சில பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் மொனிக்கா டியோடான்ஸ் தெரிவிக்கின்றார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த சைக்கிளை தான் கொள்வனவு செய்ததாக அவர் தெரிவிக்கின்றார்.

இந்த சைக்கிள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது எனவும் இதனை வடிவமைப்பதற்கு சுமார் 10,000 டாலர்கள் செலவிட்டதாகவும் மொனிக்கா தெரிவிக்கின்றார்.

வீட்டு காப்புறுதி ஊடாக இந்த சைக்கிளை மீள பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

1986 ஆம் ஆண்டு முதல் புற்றுநோய் ஆய்வாளராக கடமை ஆற்றி வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.

புற்றுநோயை ஆய்வு நடவடிக்கைகளுக்காக 90 ஆயிரம் டாலர்களை நன்கொடையாக தான் திரட்டியுள்ளதாக தெரிவிக்கின்றார்.

இதேவேளை, டொரன்டோவில் கடந்த ஆண்டு சுமார் 3000 சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.