Reading Time: < 1 minute

கனடாவில் தரம் ஐந்து மாணவர்கள் மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றிருந்த போது ஏற்பட்ட விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

சுமார் 18 அடி உயரத்திலிருந்து இந்த மாணவர்கள் கீழே விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களில் பலருக்கு எலும்பு முறிந்து உள்ளதாகவும் உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மரத்தினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ஒன்றிலிருந்து இந்த மாணவர்கள் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலம் போன்ற ஒரு கட்டமைப்பு இடிந்து விழுந்த காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்வி சுற்றுலா மேற்கொண்டு குறித்த இடத்தை பார்வையிடுவதற்காக சென்றிருந்த மாணவர்கள் 16 பேரும் வயது வந்த ஒருவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

அநேகமான மாணவர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது எனினும் சில மாணவர்களது எலும்புகள் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வின்னிக்பிக்கின் போர்ட் கிப்ரால்டர் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.