கனடாவில் கலைப் பொக்கிஷமொன்றின் மீது மேபல் சிரப் வீசி நூதன முறையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் எண்ணெய் குழாய் திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது எனக் கோரி இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புகழ்பூத்த ஓவியர் எமலி காரின் (Emily Carr) ஓவியம் மீது மேபல் சிரப் வீசி எறியப்பட்டுள்ளது.
வான்கூவார் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள “Stumps and Sky” என்ற பிரபல்யமான ஓவியம் மீது இவ்வாறு மேபல் சிரப் வீசி எறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் இரண்டு காலநிலை செயற்பாட்டாளருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய்க் குழாய் திட்டத்திற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த எதிர்ப்பு போராட்டத்தை கண்டிப்பதாக வான்கூவார் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.