கனடாவில் இயற்கை உர வகைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கரட் வகைகளை கொள்வனவு செய்பவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த கரட் உட்கொண்டவர்களுக்கு ஈகோலி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வகை கரட்களை உட்கொண்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார், எனவும் 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த வகை கரட் சந்தையிலிருந்து மீளப்பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு இந்த கரட் வகை நுகர்வு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கனடிய சுகாதாரத் திணைக்களமும் இந்த கேரட் உற்பத்திகளை உட்கொள்வதன் மூலம் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவிலும் அமெரிக்காவிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் இயற்கை செய்கையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கரட் வகைகளில் இவ்வாறு நோய் தொற்று தாக்கம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.