Reading Time: < 1 minute

கனடாவில் கடைகளில் சுமார் 260,000 டொலர் பெறுமதியான மதுபானங்களை களவாடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் குறைந்த பட்சம் 90 திருட்டுச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாகவும், LCBO வர்த்தக நிலையங்களில் இவ்வாறு மதுபான வகைகளை களவாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்தந நபருக்கு எதிராக பீல் பொலிசார் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பீல் பிராந்தியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ரொறன்ரோ பகுதியில் உள்ள கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள், எல்சிபிஓ வளப் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து 38 வயதான அவில் ஹசன் அப்டியை கைது செய்துள்னர்.

அப்டி ஏற்கனவே இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.