Reading Time: < 1 minute

கனடாவில் விசிட்டர் வீசார் நடைமுறை கடுமையாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான விசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடி உரிமை அலுவலகம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

கனடிய மத்திய அரசாங்கத்தின் இணையதளத்திலும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்டிபிள் என்ட்ரி வீசா என்ற பல தடவைகள் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கும் வீசா நடைமுறை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் விசிட்டர் வீசா மூலம் 10 ஆண்டுகள் வரையில் நாட்டுக்குள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் சுதந்திரமாக அவர்கள் நாட்டுக்குள் வருகை தரவும் நாட்டை விட்டு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் புதிய நடைமுறைகளின் பிரகாரம் பத்தாண்டு கால வீசா அனுமதி வழங்கப்படாது எனவும் ஒவ்வொரு விண்ணப்பதாரியின் விண்ணப்பங்களும் தனிப்பட்ட ரீதியில் மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் வீசா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணத்திற்காக அவர்கள் வருகை தருகிறார்கள் அவர்களது நிதிநிலை, உடல் ஆரோக்கிய நிலை, தாய் நாட்டிற்கு நான் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.