Reading Time: < 1 minute
கனடாவில் விலங்கு ஒன்று பாதுகாப்பாக வீதியை கடப்பதற்காக பொலிஸார் வீதியை மூடியுள்ளனர்.
பிரிட்டிஸ் கொலம்பியாவின் ஓக்பே பகுதி பொலிஸார் இவ்வாறு வீதியை மூடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடல் யானையொன்று பாதுகாப்பாக தரையிலிருந்து நீர்நிலையை சென்றடைவதற்காக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளது.
கடல் யானை விபத்தில் சிக்கக் கூடாது என்பதற்காக பொலிஸார் குறித்த பகுதியின் வீதிப் போக்குவரத்தை ரத்து செய்திருந்தனர்.
நீர் யானை பாதுகாப்பாக நீர் நிலையை சென்றடைந்ததன் பின்னரே, வழமையான வீதிப் போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த கடல் யானை குறித்த பகுதியில் பிரபல்யமானது எனவும் இதற்கு எமர்சன் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.