Reading Time: < 1 minute

கனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு மில்லியன் பேர் வேலையை இழந்துள்ளதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள முடக்கநிலையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின் படி, மார்ச் மாதத்தில் இழந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை இழப்புகளுக்கும் மேலாக, ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை 1,993,800 என உயர்வடைந்துள்ளது.

இதனால் வேலையின்மை வீதம் 13.0 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. இது மார்ச் மாதத்தில் 7.8 சதவீதமாக இருந்தது.

நிதிச் சந்தை தரவு நிறுவனமான ரெஃபினிடிவின் கூற்றுப்படி, சராசரியாக பொருளாதார வல்லுநர்கள் நான்கு மில்லியன் வேலைகள் இழப்பு ஏற்படும் என்றும் வேலையின்மை வீதம் 18 சதவீதம் ஆகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.