கனடாவின் பிரம்டன் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற கடத்தல் முயற்சி ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சந்தேக நபரின் வரைபடம் ஒன்றையும் பீல் பிராந்திய போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வில்லியம்ஸ் பார்க் மற்றும் மரே வீதிகளுக்கு அருகாமையில் இந்த கடத்தல் முயற்சி இடம் பெற்றுள்ளது.
ஆயுதமுனையில் பெண் ஒருவரை கடத்த முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கருப்பு நிற கார் ஒன்றில் ஆயுத முனையில் பெண் ஒருவரை, குறித்த நபர் கடத்த முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த பெண் போலீஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இந்திய பூர்வீகத்தை கொண்டவர் எனவும் பஞ்சாபி மொழியை பேசியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஐந்து அடி பத்து அங்குலம் உயரமுடைய நபர் என போலீசார் விபரித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அறிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.