டொரொண்டோவை தலைமையகமாகக் கொண்ட C.D. ஹோவ் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையில், தொழிலாளர் பற்றாக்குறையை சரிசெய்யவும், ஓய்வூதிய அமைப்புகளை நிலைத்திருக்க செய்வதற்கும் கனடா தங்களின் சாதாரண ஓய்வு வயதை 67 ஆக உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
இது உலகின் பல்வேறு வெற்றிகரமான ஓய்வு நிர்வாக முறைமைகளுடன் ஒத்துப் போவதாகவும், காலநிலை மாற்றம், வாழ்நாள் அதிகரிப்பு போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு நெருங்கிய எதிர்காலத்திற்கு நிதியியல் திட்டமிடல் அவசியம் என்றும் C.D. ஹோவ் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு நிபுணர் பரிசா மஹ்பூபி தெரிவித்தார்.
கனடாவில் கடந்த 10 ஆண்டுகளில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. எனவே, ஓய்வுபின் நீண்ட கால நிதி ஆதரவை பெற்றிருக்க மக்கள் திட்டமிட வேண்டும்”, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் ஓய்வு வயதை தள்ளி வைக்கும் எண்ணத்துக்கு ஆதரவாக இல்லை.
“ஓய்வு ஊதியத்தை தாமதமாக வழங்க திட்டமிட்டால், உடல்நிலை காரணமாக முன்னதாகவே ஓய்வுக்கு செல்லும் பணியாளர்கள் பாதிக்கப்படக் கூடாது”, என்று மூத்த குடிமக்கள் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி பில் வாங்கார்டென் தெரிவித்துள்ளார்.
கனடாவில், குறிப்பாக கிழக்கு பகுதியில், மூத்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.