Reading Time: < 1 minute

கனடாவில் தொழில் துறை ஊழியர்களுக்கான ஒரு மணி நேர குறைந்தபட்ச ஊதியம் டிசம்பர் 29 முதல் 15 டொலர்களாக அதிகரிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

லிபரல் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பொருளாதார செழிப்பு என்பது ஒவ்வொரு கனேடியரும் பொருளாதார ரீதியாக வெற்றிபெறுவதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு 15 டொலர் ஊதிய உயர்வு குறைந்தபட்ச ஊதியம் பெறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நிவாரணமாக அமையும் என கனடிய தொழிலாளர் துறை அமைச்சர் சீமஸ் ஓ’ரீகன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் விமானப் பயணத் துறை, வங்கி, துறைமுக சேவைகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு, ரயில், தொலைத்தொடர்பு மற்றும் சுரங்கம் உள்ளிட்ட தொழில்துறை சார்ந்தவர்களுக்கும் இந்த உதிய உயர்வு பொருந்தும்.

கனடாவில் தொழிலாளர்கள் பெருமளவானோர் தற்போது ஒரு மணி நேரத்துக்கு 15 டொலருக்கு குறைந்த ஊதியத்தையே பெறுகின்றனர். ஒன்ராறியோ அல்லது கியூபெக்கில் அதிகளவானவர்கள் குறைந்த ஊதியம் பெற்வோராக உள்ளனர்.

இந்நிலையிலேயே புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 29 ஆம் திகதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் எனவும் கனடிய அரசு அறிவித்துள்ளது.