கனடாவின் ஒட்டாவாவில் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் விஞ்ஞான ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது.
ஒட்டாவா தேசிய ஆய்வு பேரவையில் இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது.
சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜின்னா சொட்ஸ் இந்த விடயத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஒட்டாவாவின் மொன்றியல் வீதியில் இந்த கட்டடம் ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது.
விஞ்ஞான ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக இந்த நிலையம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கார்பன் வெளியீட்டை குறைத்து, பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்த நிலையம் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
450 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இந்த புதிய நிலையம் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த கட்டிட நிர்மாணத்திற்கான ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கட்டிடத்தின் வடிவமைப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பமாகும் எனவும், நிர்மாண பணிகள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.