Reading Time: < 1 minute

ஒன்றாரியோ ஜிடிஏ (GTA) பகுதியில் பணியாற்றும் ஐந்து சக பணியாளர்கள் இணைந்து லூனர் வருடப்பிறப்பை (Lunar New Year) முன்னிட்டு கொள்வனவு செய்த லாட்டரி சீட்டின் மூலம் $60 மில்லியன் ஜாக்க்பாட் வென்றுள்ளனர்.

இந்த குழு ஜனவரி 21 அன்று நடைபெற்ற லாட்டோ மேக்ஸ் (Lotto Max) பரிசிலுப்பில் இந்த பரிசை வென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசிசாகாவை சேர்ந்த ட்ராங் ஃபாம் (Trang Pham) குழுவின் சார்பாக இந்த சீட்டினை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

லூனர் வருடப்பிறப்பு அவரது குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் அவர் லாட்டரி சீட்டினை வாங்கியதாக கூறியுள்ளார்.

“லூனர் வருடப்பிறப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அலுவலகத்திற்காக க்ரீமர் வாங்கச் சென்ற போது, குழுவிற்காக ஒரு லாட்டரி சீட்டும் வாங்க முடிவு செய்தேன்,” என ஃபாம் தெரிவித்தார்.

இந்த சீட்டினை அவர் எடோபிக்கோ (Etobicoke) பகுதியிலுள்ள கயான்ட் டைகர் (Giant Tiger) கடையில், கிப்லிங் அவென்யூவில் இருந்து வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. பரிசை வென்ற தகவல் பின்தினம் வெளியானது.

வெற்றியாளர்கள் பட்டியலில் எடோபிக்கோவில் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியதும், ஃபாம் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

ஒவ்வொரு சக பணியாளருக்கும் இப்போது $12 மில்லியன் வழங்கப்படும்.

மிசிசாகாவைச் சேர்ந்த ஸோங் ட்ரான் (Soung Tran), ப்ராம்ப்டனைச் சேர்ந்த ஃபாங் ஃபான் (Phong Phan), டொரொண்டோவைச் சேர்ந்த தூக் லே (Thuc Le), ஸ்கார்பரோவைச் சேர்ந்த ஜூ ஹ்ஸிஹ் (Zou Hsieh) ஆகியோர் இந்த வெற்றியில் பங்கேற்றுள்ளனர்.

“நான் இளம் வயதாக இருப்பதால் உடனடியாக ஓய்வுபெறப் போவதில்லை,” என ஃபாங் ஃபான் தெரிவித்தார்.

ஆனால், ஹ்ஸிஹ் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார். “கடந்த ஆண்டு ஓய்வுபெறுவதைப் பற்றி கவலைப்பட்டேன், ஆனால் இப்போது அதை பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

உலகம் முழுவதும் சுற்றிப் பார்ப்பதற்காக பயணம் செய்ய விரும்புகிறேன்.

குறிப்பாக, வடதுருவ ஒளி (Northern Lights) நேரில் காண மிகவும் ஆவலாக உள்ளேன்,” என ஹ்ஸிஹ் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.