Reading Time: < 1 minute

எதிலிகளுக்கான தரைவழி எல்லை பகுதியை மூடியதன் பின்னர் ஏதிலி கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவுடனான எல்லை பகுதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

ஏதிலிகள் தரை வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்த எல்லைப் பகுதிகள் மூடப்பட்டிருந்தன.

எவ்வாறெனினும் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதன் பின்னர் சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் பிரவேசிக்கும் நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக எல்லை பகுதிகள் மூடப்பட்டால் ஏதிலி கோரிக்கையாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் எண்ணிக்கை குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் தற்பொழுது ஏதிலி கோரிக்கையாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக எண்ணிக்கையிலானவர்கள் விமானம் வழியாக நாட்டுக்குள் பிரவேசிப்பதாகவும் சட்டவிரோதமான முறையில் சில எல்லைப் பகுதிகளுக்குள் இருந்து கனடாவிற்குள் பிரவேசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய நாட்களாக இவ்வாறு ஏதிலி கோரிக்கையாளர் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக கனடியஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் சுமார் 39 ஆயிரம் ஏதிலிக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமான முறையில் எல்லைகளை கடந்து நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏதிலி அந்தஸ்து பெற்றுக் கொள்வதற்காக சிலர் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.