கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளைச் சம்பவங்களை தவிர்க்க விசேட சட்டம் அறிமுகம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சாரதிகள், எரிபொருள் நிரப்ப முன்னதாக, அதற்கான பணத்தை செலுத்துவதனை கட்டாயமாக்க உத்தேச சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் தீபக் ஆனந்த் இந்த பரிந்துரையை செய்துள்ளார்.
இந்த சட்டத்தின் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணியாற்றுவோர் தாக்குதல்களுக்கு இலக்காவதனை தடுக்க முடியும் என அவர் நம்பிககை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை நிரப்பிக் கொண்டு பணம் செலுத்தாது தப்பியோடிய சம்பவங்கள் கூடுதல் எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.
எனவே, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப முன்னதாகவே பணத்தை செலுத்தும் புதிய நடைமுறை ஒன்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த ஆண்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களினால் 3.75 மில்லியன் டொலர்கள் இழக்கப்பட்டுள்ளது.