Reading Time: < 1 minute

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருளுக்கான வரியை நிரந்தரமாக நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய வரி செலுத்துவோர் ஒன்றியத்தினால் இந்த கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒன்றாறியோ மாகாணத்தின் இவ்வாறு வரி குறைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இவ்வாறு வரி குறைப்பு ஊடாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு குடும்பம் சுமார் 900 டாலர்களை சேமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது.

இந்த வரிச் சலுகை காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் குறைக்கப்பட்டது.

அதன் பின்னர் அதற்கு அடுத்த ஆண்டிலும் எரிபொருளுக்கான வரி விதிப்பு ரத்து செய்யப்பட்டது.

இதனால் எரிபொருட்களின் விலை ஓரளவு குறைவாக காணப்பட்டது. இந்த வரிச்சலுகையை நிரந்தரமாக வழங்க வேண்டும் என கனடிய வரி செலுத்துவோர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறு எனினும் கார்பன் வரி அதிகரிப்பு எரிபொருள் விலைகளில் தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.