Reading Time: < 1 minute

கனடாவில் இறக்குமதி செய்யப்பட்ட எனோக்கி காளானில் லிஸ்டீரியா பாதிப்பு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சுகாதார துறை மற்றும் கனடா உணவுப் பரிசோதனை அமைப்பு (CFIA) பொதுமக்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட எனோக்கி காளான்களை (Enoki mushrooms) உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கின்றன.!

தென் கொரியா , சீனாவிலிருந்து இறக்குமதி
இந்த எனோக்கி காளான்கள் Listeria monocytogenes என்ற பாதகமான பாக்டீரியாவால் மாசுபடக்கூடும் என கூறப்படுகிறது. இந்த எனோக்கி காளான் என்பது நீளமாகவும் நெருக்கமாகவும் தோன்றி, சிறிய வெள்ளைத் தலையுடன் இருக்கும்.

இது, பெரும்பாலும் ஆசிய உணவுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருளாக இருந்தாலும், சில சமயங்களில் பச்சையாக உண்ணப்படுவதால், அந்த உணவின் மூலம் நோய் பரவுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

கனடாவில் கிடைக்கக் கூடிய எனோக்கி காளான்கள் பெரும்பாலும் தென் கொரியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து, இந்த நாடுகளிலிருந்து பல பிராண்டுகளின் காளான், லிஸ்டீரியா பாதிப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இது, பெரும்பாலும் ஆசிய உணவுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருளாக இருந்தாலும், சில சமயங்களில் பச்சையாக உண்ணப்படுவதால், அந்த உணவின் மூலம் நோய் பரவுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு
லிஸ்டீரியா பாக்டீரியா குளிர்சாதன வெப்பநிலையிலும் உயிர் வாழும் தன்மை கொண்டது. எனவே மாசுபட்ட எனோக்கி காளான்கள் சில நேரங்களில் மாசுபட்டவையாக தெரியாமல் இருக்கலாம்.

லிஸ்டீரியா நோய், மாசுபட்ட உணவை உட்கொண்ட 3 முதல் 70 நாட்களில் வெளிப்படும். அதன் அறிகுறிகளில் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தசை வலி, தலைவலி போன்றவை அடங்கும்.

குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதன்மூலம் எளிதாக பாதிக்கப்படலாம். கர்ப்பிணி பெண்களுக்கு இது கருக்கலைப்பு அல்லது குழந்தை இறந்து பிறக்கும் அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.