வருகை விசாவில் (visitor visas) கனடா வந்து தற்போது தங்கியுள்ளவர்கள் தங்களது நாட்டில் தங்குவதற்கான அனுமதிக்காலத்தை நீடிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக வருகை விசாவில் கனடா வரும் வெளிநாட்டவர்கள் கனடாவில் ஆறு மாதங்கள் வரை சட்டப்பூர்வமாக தங்கியிருக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் தற்போது தொற்று நோய் நெருக்கடி காரணமாக வெளியேற முடியாதவர்கள் தங்கள் விசாவை நீடித்துக் கொள்ள முடியும்.
இதற்காக கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறையினருக்கு (IRCC) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதேநேரம் விசா காலாவதியான நிலையில் நாட்டை விட்டு வெளியேற விரும்புவோர் வெளியேற முடியும். எனினும் வெளியேற விரும்புவோர் மீண்டும் வருகை விசாவில் மீள கனடா வருவதற்கான எந்தவிதமான உத்தரவாதமும் தற்போது வழங்கப்படாது.
வருகை விசா காலம் ஏற்கனவே காலாவதியாகியவர்களும் சில நிபந்தனைகளைப் பூா்த்தி செய்து தங்கள் தங்கும் காலத்தை நீடித்துக்கொள்ள முடியும்.