கனடாவில் அல்பர்ட் டா மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சியை உருவாக்கும் சாதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உலகில் மிகவும் உயரம் கூடிய ஐஸ் குச்சியை உருவாக்குவதற்கு தென் அல்பர்ட்டாவின் ஹட்டரைட் மக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
மியாமி ஹட்ரைட் பாடசாலையின் மாணவர்கள் இந்த மிகப்பெரிய ஐஸ் குச்சி வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரையில் இந்த ஐஸ் குச்சி 88.9 அடி உயரம் வரையில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மாணவர்கள் இவ்வாறான ஓர் ஐஸ் குச்சியை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர்.
ஒகியோவை சேர்ந்த ஒருவர் 21 அடி உயரமான ஐஸ் குச்சி வடிவத்தை உருவாக்கி இருந்தார்.
அதன் பின்னர் ஆல்பர்ட்டா பள்ளி மாணவர்கள் இந்த ஐஸ் குச்சி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு 41 அடி உயரமான ஐஸ் குச்சியை உருவாக்கி இருந்தனர்.
இது கின்னஸ் உலக சாதனையாக காணப்பட்டது.
ஆறு மாத கால இடைவெளியில் பிரேசிலை சேர்ந்த ஒருவர் 77.9 அடி உயரமான ஐஸ் குச்சியை உருவாக்கி இந்த சாதனையை முறையடித்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் அல்பர்ட்டா பள்ளி மாணவர்கள் இந்த சாதனையை முறியடிக்கும் நோக்கில் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 40,000 ஐஸ் குச்சிகளை ஒன்றிணைத்து பாரிய அளவிலான ஓர் ஐஸ் குச்சியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
சுமார் 125 அடி உயரமான ஐஸ் குச்சியை உருவாக்குவது தங்களுடைய நோக்கம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது இந்த ஐஸ் குச்சி 88 தசம் 9 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஐஸ் குச்சி கட்டமைப்பை உருவாக்கும் போது பல்வேறு சவால்களை எதிர் நோக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.