Reading Time: < 1 minute
கனடாவில் ரோபோக்கள் உணவு விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
பொதுவாக பணியாளர்களினால் வீடு வீடாக டெலிவரி செய்யப்படும் உணவு வகைகள் தற்பொழுது ரோபோக்களினால் விநியோகம் செய்யப்படுகின்றன.
வான்கூவாரின் நடைபாதைகளில் இந்த ரோபோக்களை பார்வையிட முடியும். இவை வாடிக்கையாளர்களின் வீடுகளை நோக்கி சென்று உணவை டெலிவரி செய்கின்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகை ரோபோக்கள் பூச்சிய கார்பன் வெளியீட்டைக் கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது.
றொரன்டோ போன்ற சில பிரதான நகரங்களில் ரோபோக்கள் உணவு விநியோகம் செய்ய அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ரோபோக்களை கடமையில் அமர்த்துவதனால் பணியாளர்களின் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.