Reading Time: < 1 minute

கனடாவில் எரிவாயு விலை உச்சம் தொடும் என துறைசார் நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

குறிப்பாக றொரன்டோ பெரும்பாக பகுதியில் எரிவாயு விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்வினை பதிவு செய்யும் என தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் புதன்கிழமை எரிவாயு ஒரு லீற்றரின் விலை நான்கு சதத்தினால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை 190.9 சதங்களாக உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விலையானது கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி வரலாறு காணாத அளவிற்கு எரிவாயு விலை உயர்வு பதிவாகியிருந்த தொகைக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் – ரஸ்ய யுத்தம் போன்ற காரணிகளினால் கடந்த சில மாதங்களாகவே எரிவாயுவின் விலைகள் உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.