கனடாவில் உக்ரைனிய தாய் ஒருவருக்கு ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள அதேவேளை, அவரது ஆறு வயது மகனது விண்ணப்பம் இன்னும் பரிசீலனை செய்யப்படவில்லை.
35 வயதான இர்யானா மிஸ்யானா என்ற பெண்ணுக்கு கனடாவில் தற்காலிக அடிப்படையில் தொழிலில் ஈடுபடுவதற்கும் தங்குவதற்கும் ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அவரது மகன் நிகிட்டா என்ற ஆறு வயது சிறுவனுக்கு ஏதிலி அந்தஸ்து வழங்கப்படவில்லை.
நிகிட்டா போன்று 279000 உக்ரைனியர்கள் தங்களது ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்கள் பதிசீலனை செய்யப்படும் வரையில் காத்திருக்கின்றனர்.
கடந்த ஜூலை மாதம் வீசாவிற்காக விண்ணப்பம் செய்த பெண்ணுக்கு செப்டம்பர் மாதத்தில் வீசா கிடைக்கப் பெற்றுள்ளது.
எனினும் அவரது மகனின் வீசா ஆறு மாதங்கள் கடந்தும் பரிசீலைன செய்யப்படவில்லை. மகனுக்கு வீசா கிடைக்காவிட்டால் தம்மால் கனடாவிற்கு வர முடியாது என அவர் குறிப்பிடுகின்றார்.