கனடாவில் இறுதி நேரத்தில் தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிட்டதாக கல்விப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒன்றாரியோ மாகாணத்தின் சுமார் 55000 பணியாளர்கள் போராட்டத்தில் குதிக்கத் தீர்மானித்திருந்தனர்.
கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்படாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இறுதி நேரத்தில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளக் கூடிய யோசனைத் திட்டமொன்றை மாகாண அரசாங்கம் முன்வைத்துள்ளது எனவும் தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்படுவதாகவும் கல்விப் பணியாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மாகாண அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் சுமார் 171 நாட்களாக பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு மற்றும் பணிச்சூழ்நிலை உள்ளிட்ட சில காரணிகள் அடிப்படையில் தொழிற்சங்கத்திற்கும், மாகாண அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.