Reading Time: < 1 minute

கனடாவில் இருந்து குறிப்பிடத்தக்களவு குடியேறிகள் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் குடியேறும் நபர்கள் 25 ஆண்டுகளுக்குள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 25 வீதமானவர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வெளியேறுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் முதல் ஐந்தாண்டு காலப்பகுதியிலேயே கனடாவை விட்டு வெளியேறி விடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய குடி வரவு நிறுவகம் மற்றும் கனடிய பேரவையினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் கனடாவை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.