கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்கு சென்றவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடாவில் புலம்பெயர்ந்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் புலம்பெயர் தமிழர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
ஏமாற்றிய தரகர்
யாழில் காணி வாங்க முற்பட்டவருக்கு, தெல்லிப்பழை பகுதியில் காணியை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த காணி தரகர் ஒருவரே அடையாளம் காட்டி , காணி உரிமையாளருடன் பேச்சுக்களையும் நடத்தியுள்ளார்.
அதனை அடுத்து காணியை கொள்வனவு செய்வதற்கு 85 இலட்ச ரூபாய் பணத்தினை ரொக்கமாக தயார் செய்திருந்த நிலையில், அந்த பணத்தினை கனடா வாசி தன்னுடன் வைத்திருந்தார்.
புலம்பபெயர் தமிழர் அசந்த நேரம் பார்த்து , காணி தரகர் 85 இலட்ச ரூபாய் பணத்தினை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் காணிமோசடிகள் அதிகரித்துள்ளதாக ஏற்கனவே யாழ்ப்பாண பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.