Reading Time: < 1 minute

கஞ்சா போதைப் பொருள் கடத்திய மூன்று பேரை டொரொண்டோ போலீசார் கைது செய்துள்ளனர்.

குறித்த மூவரும் போதைப்பொருள் கடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினர்களாக இருப்பதாகவும், கனேடிய கஞ்சாவை பயணப்பைகளில் வைத்துப் பிரிட்டன் வரை கடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

டொரொண்டோ போலீசாரின் போதைப்பொருள் தடுப்பு பிரிவும் அவசர நடவடிக்கை பிரிவும் மார்ச் 5 அன்று மார்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

குறித்த இடத்தில் கஞ்சா களஞ்சியப்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சில பயணப்பைகளில் இருந்த கஞ்சா, இங்கிலாந்து இங்கிலாந்து எடுத்துச் செல்ல முற்பட்ட போது கனடிய பொலிஸார் அவற்றை மடக்கிப் பிடித்துள்ளனர்.

மேலும், அந்த முகவரியுடன் தொடர்புடையவர்கள் கனடாவின் சுகாதாரத் துறையில் (Health Canada) பதிவு செய்யப்படவில்லை என்றும், அவர்கள் சட்டப்படி கஞ்சாவை தயாரிக்கவோ விநியோகிக்கவோ அதிகாரம் பெற்றவர்கள் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, போலீசார் போதைப்பொருள்கள், போதைப்பொருள் தொகுப்புகளும் மற்றும் குற்றத்திலிருந்து சம்பாதிக்கப்பட்ட பணமும் கைப்பற்றியுள்ளனர்.

மொத்தம் 19 குற்றச்சாட்டுகள் கைது செய்யப்பட்ட மூவருக்கு எதிராகவும் மொத்தமாக 19 போதைப்பொருள் மற்றும் ஆயுத தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.