கனடாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கனடா (Elections Canada) இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கப்பட உள்ளது. இப்பதவிகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ஒன்றுக்கு 20 டொலர்களாகும்.
தற்போதைய கடினமான வேலை சந்தையில், இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையை மேம்படுத்த விரும்பும் நபர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி, கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்ற சில நாட்களில், திடீர் தேர்தல் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே, என்டிபி தலைவர் ஜக்மீத் சிங், கிரீன் கட்சி தலைவர்கள் எலிசபெத் மே மற்றும் ஜோனாதன் பெட்நோல்ட் உள்ளிட்டோர் நாடு முழுவதும் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறும், முன் கூட்டிய வாக்குப்பதிவு ஏப்ரல் 18 முதல் 20 ம் திகதி வரையில் வரை நடைபெறும்.
தேர்தல் பணிகளில் ஈடுபடத் தேவையான தகுதிகள்
- கனடா குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 16 வயது நிறைவு செய்ய வேண்டும்.
- பணியின்போது எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது.
- வாசிப்பு, எழுத்துத் திறன்கள், மக்கள் தொடர்புத் திறன், மாற்றுத்திறனாளிகளை உதவிக் காணும் திறன், கவனக்குறைவு இல்லாத தன்மை, மற்றும் வழிமுறைகளை பின்பற்றும் திறன் இருக்க வேண்டும்.
பணியில் சேர தகுதியற்றவர்களில் பின்வருவோர் அடங்குவர்:
- மத்திய அமைச்சர்கள், மாகாண அமைச்சரவைக் குழு உறுப்பினர்கள், செனட்டர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண/காண்டோனியல் சட்டமன்ற உறுப்பினர்கள், சில நீதிபதிகள், மற்றும் சமீபத்திய பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட்டவர்கள். • கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய, மாகாண, நகராட்சி, பள்ளி வாரியம் தேர்தல்களில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தண்டனை பெற்றவர்கள் போன்றவர்கள் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடத் தகுதியற்றவர்கள் என அறவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.