Reading Time: < 1 minute
கனடாவில் இரண்டு பெண்கள் மர்மமான முறையில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் எட்டாபிகொக் பகுதியில் வீடொன்றில் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 33 வயதான ஒருவரை பொலிஸார் தேடி வந்தனர்.
எவ்வாறெனினும், ஜோசப் அய்லா என்ற 33 வயதான நபரையே பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த நபர் வெள்ளையினத்தைச் சேர்ந்த 5 அடி 11 அங்குல உயரைத்தைக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.