கனடாவின் நகரில் இரண்டு பிள்ளைகளுடன் வாகனம் ஒன்று களவாடப்பட்டுள்ளது.
டொரன்டோவில் மேற்கு பகுதியில் இரண்டு பதின்ம வயது சிறுவர்களினால் இந்த வாகன கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெஸ்டன் வீதி மற்றும் லோரன்ஸ் அவென்யூ பகுதிகளுக்கு அருகாமையில் இந்த வாகன கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண் ஒருவர் மளிகை பொருட்களை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தபோது திடீரென உட்பிரவேசித்த இரண்டு பதின்ம வயது உடைய சிறுவர்கள் வாகனத்தை கடத்திச் சென்றுள்ளனர்.
வாகனத்தை கொள்ளையிட்டவர்கள் 16 மற்றும் 13 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்த வாகனம் கொள்ளையிடப்பட்ட சந்தர்ப்பத்தில் வாகனத்திற்குள் 5 வயது மற்றும் நான்கு மாதங்களான இரண்டு குழந்தைகள் வாகனத்தில் உள்ளே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாகன கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் ஒரு குழந்தை காயமடைந்து சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.