கனடாவில் சட்டவிரோதமான முறையில் சீன போலீஸ் நிலையங்கள் இயங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் இவ்வாறு இயங்கி வந்த இரண்டு போலீஸ் நிலையங்கள் தொடர்பிலான தகவல்கள் அம்பலமாக உள்ளது.
சீனா வெளிநாடுகளில் தனது போலீஸ் சேவைகளை வழங்குவதற்காக இவ்வாறு சட்டவிரோதமான முறையில் போலீஸ் நிலையங்களை பல நாடுகளில் நிறுவி செயற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
53 நாடுகளில் சுமார் 12 போலீஸ் நிலையங்களை சீனா செயல சில நாடுகளில் இவ்வாறு போலீஸ் நிலையங்களை அமைப்பதற்கு அந்த நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக மனித உரிமை அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் சீன பிரஜைகளை இலக்கு வைத்து இந்த போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சீனாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை அந்த நாடுகளில் வைத்து அடக்குமுறைக்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வான்கூவார், மற்றுமொரு இடத்தில் இவ்வாறு சட்ட விரோதமான நிலையில் சீன போலிஸ் நிலையங்கள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத போலீஸ் நிலையங்களில் குற்றச் செயல்கள் இடம் பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.