கனடாவில் ப்ராஸர் ஆற்றில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் எதிர்நீச்சலிட்டு இனப்பெருக்க பகுதிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் சல்மன் வகை மீன்களை உலங்குவானூர்திகளின் உதவியுடன் மீட்டு வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
கனடாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டபோது, லில்லூயட் நகரின் வடக்குபுறம் உள்ள பாறைகள் உருண்டு ப்ராஸர் ஆற்றில் விழுந்தன.
ஆனால் குறித்த ஆறு, அடர்ந்த பகுதியில் இருந்ததால், பாறைகள் உருண்டு விழுந்து நீர்வீழ்ச்சி போல் உருவாகியிருந்தமை தற்போது தான் தெரியவந்துள்ளது.
இதனால் சினூக், ஸ்டீல்ஹெட், கோஹோ, சல்மன் உள்ளிட்ட பலவகை மீன்கள் இனப்பெருக்கத்திற்காக எதிர் நீச்சலிட்டு தங்களுக்கு உகந்த பகுதிகளுக்கு செல்லமுடியாமல் தவித்து வந்தன.
இதனால் உலங்குவானூர்திகள் மூலம் மீன்களை இனப்பெருக்க பகுதிக்கு எடுத்து செல்லும் முயற்சிகள் கடந்த வாரம் தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.