Reading Time: < 1 minute

கனடாவில் பயன்படுத்தப்பட்டுவரும் ஒருவகை கண் சொட்டு மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கண் சொட்டு மருந்து ஊடாக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய மருந்து பொருள் நிறுவனம் இது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மொன்றியாலை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பென்டூஃபார்ம் என்ற மருந்து பொருள் நிறுவனம் இந்த கண் சொட்டு மருந்துகளை சந்தையில் இருந்து மீளப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

சொட்டு மருந்து வகைகளை பயன்படுத்துவதன் ஊடாக கண்ணில் நுண்ணுயிர் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பை கொண்டவர்கள் இந்த மருந்து வகைகளை பயன்படுத்துவதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமானவர்கள் பயன்படுத்தினாலும் சில உபாதைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

க்ரோமொலைன் கண் சொட்டு மருந்து (Cromolyn Eye Drops) வகைகளே இவ்வாறு சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

இந்த மருந்து பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.