Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் சில வகை சீஸ் வகைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கனேடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் சில வகை சீஸ் வகைகளை மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Le Fromage au Village மற்றும் La Vache à Maillotte ஆகிய பண்டக் குறிகளைக் கொண்ட சீஸ் வகைகள் இவ்வாறு சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சீஸ் வகைகளில் லிஸ்திரியா என்னும் உடலுக்கு தீங்கிழைக்கும் பொருள் காணப்படுவதாக தெரிவித்து இவ்வாறு சீஸ் சந்தையிலிருந்து மீறப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

150, 200 மற்றும் 275 கிராம் பக்கட்டுகளில் இவ்வாறு சீஸ் வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஒன்றாரியோ, கியூபெக் மாகாணங்களிலும் இணைய வழியிலும் இந்த சீஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

லிஸ்திரியா தாக்கம் செய்த உணவுப் பொருட்களின் வாசனையிலோ அல்லது தோற்றத்திலோ மாற்றம் இருக்காது என்ற போதிலும் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லிஸ்திரியா தாக்கத்தினால் வாந்தி, வயிற்றுப் போக்கு, தொடர்ச்சியாக காய்ச்சல், தசை வலி, தலைவலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்படலாம் தெரிவிக்கப்படுகின்றது.