Reading Time: < 1 minute
கனடாவில் இந்த ஆண்டில் வீட்டு விலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி முதல் இந்த ஆண்டு டிசம்பர் வரையிலான காலப் பகுதியில் தேசிய அளவில் வீடுகளின் விலைகள் 23 வீத வீழ்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் வீடுகளின் விலைகளில் பாரிய அளவில் அதிகரித்திருந்த நிலையில், வீடுகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகவுள்ளது.
பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக காணப்பட்ட காலப் பகுதியைப் போன்று மாகாணங்களில் வீடுகளின் விலைகள் இந்த ஆண்டில் காணப்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் காலாண்டு பகுதியில் கனடாவில் வீடுகளின் விலைகள் 20 முதல் 25 வீதம் வரையில் குறைவடையும் என ரீ.டி வங்கி (TD Bank) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.