கனடாவில் இந்த ஆண்டில் சிலவற்றுக்கான விலைகள் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் எரிபொருளுக்கான விலைகள் ஏற்ற இறக்கங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது எரிபொருளின் விலை குறைவாக காணப்பட்டாலும், எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பெற்றோலின் விலை 2 டொலர்களாக உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட்டி வீதம் உயர்வு, சீன கோவிட் நிலைமை போன்ற காரணிகளினால் இவ்வாறு எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குளிருடனான காலநிலையினாலும் அதிகளவு எரிபொருள் தேவை ஏற்படும் எனவும் இதனால் விலை அதிகரிப்பு பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் உணவுப் பொருட்களின் விலைகள் 7 வீத்த்தினால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் வருடாந்த உணவுச் செலவு 16288.41 டொலர்களாக காணப்படும் எனவும் கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இது 1065.60 டொலர்களாக உயர்வடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போர் பொருட்களின் விலை ஏற்றத்தில் பாரியளவு உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.