Reading Time: < 1 minute

கனடாவில் இந்த ஆண்டில் அதிக விலைக்கு உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளமை குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

றொரன்டோவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே ஆர்டரில் ஊபர் ஈட்ஸ் ஊடாக 1048.01 டொலர் பெறுமதியான உணவுப் பண்டங்களை ஆர்டர் செய்துள்ளார்.

இதுவே கனடாவில் ஆர்டர் செய்யப்பட்ட அதிக விலையுடைய ஆர்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

வான்கூவாரில் ஜப்பானிய ரெஸ்டூரன்ட் ஒன்றில் 1039.01 டொலர் பெறுமதியான உணவுப் பண்டமும், மொன்றியலில் 893.54 டொலர் பெறுமதியான உணவுப் பண்டமும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

இந்த உணவு ஆர்டர்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வகிக்கின்றன.

மிகவும் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் ஆர்டர்களை செய்யும் நகரங்களின் வரிசையிலும் இந்த றொரன்டோ, வான்கூவார் மற்றும் மொன்றியல் ஆகிய நகரங்கள் முன்னிலை வகிக்கின்றன.

கனடாவில் அதிகளவில் உணவு ஆர்டர் செய்யும் உணவு வகைகளாக ஜப்பான் உணவு வகைகளையும், அடுத்த இடங்களில் இந்திய மற்றும் சீன உணவு வகைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

கனடாவில் மிக விலை உயர்ந்த ஒரே ஆர்டரைச் செய்தவர் பேர்கர் ஜொயின்ட்( burger joint,) உணவுப் பண்டத்தை கொள்வனவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.