கனடாவில் இதுவரை 54 இலட்சத்து 40 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு இலட்சத்து 27ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 267 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 940ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்று நான்கு பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஒன்பதாயிரத்து 117ஆக அதிகரித்துள்ளன.
மேலும், ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 664 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளதுடன் கனடாவில் தற்போது வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.
கனடாவின் கியூபெக் மாகாணமே வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 62 ஆயிரத்து 352 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, ஒன்ராறியோ மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு 42 ஆயிரத்து 195 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
இதையடுத்து, அல்பேர்டா மாநிலத்தில் 13ஆயிரத்து 476 பேர் வைரஸ் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஐயாயிரத்து 596பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.