கனடாவின் இடாஹோ பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம் நவம்பர் மாதம் 13ஆம் திகதியன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவிகள் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. உயிரிழந்த இருவரும் மிகவும் அழகாக இருந்தனர்.
அவர்கள் ஆறாம் வகுப்பிலிருந்தே சிறந்த நண்பர்கள், என உயிரிழந்த மாணவிகளில் ஒருவரின் தந்தை கூறினார். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒன்றாக வீட்டுப்பாடம் செய்தார்கள், அவர்கள் வீட்டிற்கு ஒன்றாக வந்து செல்வார்கள். அவர்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர் எனவும் அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
இரு நண்பிகளும் ஒரே உயர்நிலைப் பாடசாலையில் பயின்றதுடன், கல்லூரிகளிலும் ஒன்றாகப் படித்தார்கள் என கூறிய அவர் இறுதியில் ஒரே படுகையில் ஒன்றாகவே உயிரிழந்துவிட்டதாகவும் கதறி அழுதமை பார்ப்பவர் நெஞ்சங்களை கனக்க செய்துள்ளது.