கனடாவின் கிரேவென்ஹர்ஸ்ட் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறற்ச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன.
இந்த நபர்கள் மீது தாக்குதல், கொள்ளை மற்றும் ஆயுத சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி 27ம் திகதி மாலை 6:30 மணியளவில் சத்வுட் வீதி(Southwood Road) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அசம்பாவிதம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அச்டன் கார்னேகி (26), பிராண்டன் ரீட் (33), ஜோடி ஸ்பியர்ஸ் (52) ஆகிய மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலவந்தமான அடிப்படையில் தடுத்து வைத்தல், தாக்குதல் (Assault), துப்பாக்கியுடன் கொள்ளை (Robbery using a firearm), ஆயுதத்துடன் தாக்குதல் (Assault with a weapon) உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.