கனடாவில் இடம் பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
ஹமில்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பார்டென் வீதியின் அமைந்துள்ள பெடல்ஸ் விருந்தகத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 20 மற்றும் 28 வயதான இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
காயங்களும் உயிராபத்தானவை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
மதுபான கடைக்கு சொந்தமான வாகன திரைப்படத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திட்டமிட்ட அடிப்படையிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இதனை கருத முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, போவன் வீதியின் களியாட்ட விடுதி ஒன்றியம் மற்றும் ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டை கருப்பின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களாக களியாட்ட விடுதிகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.