Reading Time: < 1 minute

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வோகனின் ஜேன் வீதி மற்றும் ரதர்போர்ட் ஆகிய வீதிகளுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரும் உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நபர் ஒருவர் ஆறு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

என்ன காரணத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது பற்றியவிபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எவ்வாறெனினும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.