கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானத்தில் பயணித்த மூன்று பேரும் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சீ பிளேன் அல்லது ப்ளோட் பிளேன் எனப்படும் இந்த வகை விமானங்கள் நீர் நிலைகளில் தரையிறக்க கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாகாணத்தின் ஹார்டி துறைமுகப் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விமானம் பறக்க ஆரம்பித்து சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது என நேரில் பார்த்த சாட்சியொருவர் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் விமானி மற்றும் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் நீரில் மூழ்கிவிட்டதாகவும், இதில் பயணித்தவர்கள் உயிருடன் மீட்க சந்தர்ப்பம் கிடையாது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விமான விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.