Reading Time: < 1 minute

கனடாவின் பல்வேறு பகுதிகளில் மரதன் ஓட்டப் போட்டிகள் பிரபல்யம் அடைந்து வரும் நிலையில் இந்த போட்டிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மரதன் ஓட்டப் போட்டியை அடிப்படையாகக் கொண்டு இணைய வழியில் மோசடிகள் இடம் பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி மக்களிடம் மோசடி செய்யும் கும்பல்கள் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்காத புதியவர்கள் இந்த மோசடி வலையில் சிக்கும் சாத்தியம் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களின் வாயிலாக மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்பவர்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக மோசடியான நபர்களிடம் சிலர் பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே மக்கள் போதிய அளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.