Reading Time: < 1 minute

கனடாவின் பீல் பிராந்தியத்தில் இடம் பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பீல் பிராந்திய போலீசார் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பிரம்டனில் இந்து ஆலயத்திற்கு எதிரில் இடம் பெற்ற போராட்டம் உள்ளிட்ட குறித்த பிராந்தியத்தில் இடம்பெற்ற பல்வேறு போராட்டங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

நகரின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் நடத்தும் உரிமைக்கு மதிப்பளிக்கின்ற அதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு காணப்படுவதாக போலீசார் சுட்டிக்காட்டி உள்ளனர்.

அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பீல் பிராந்திய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.